10th Scientific Advisory Committee Meeting at KVK, Nagapattinam
பத்தாவது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்
நாகப்பட்டினம், சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “பத்தாவது
அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்” 14.03.2023 அன்று வேளாண்மை அறிவியல்
நிலையத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா
மீன்வள பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர். கோ.சுகுமார், அவர்கள்
தலைமையேற்று நடத்தி வைத்தார். ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி
கழகத்தின் மண்டல இயக்குநர் முனைவர். ஷேக். ந. மீரா அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார். வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உள்ள பல்வேறு
செயல்விளக்க திடல்களை பார்வையிட்டு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், 2021 ஆண்டின் மண்டல அளவில் சிறந்த வேளாண்மை அறிவியல் நிலையமாக
சிறந்த பயிற்சிகள், சிறந்த செயல்விளக்க மாதிரிகள் மற்றும் சிறந்த விரிவாக்க பணிகள்
ஆகியவற்றில் மூன்று விருதுகள் பெறப்பட்டதை அறிவித்தார். நபார்டு திட்டத்தின் கிழ்
ஆடு வளர்ப்பு பயனாளிகளுக்கு ஆட்டுக்குட்டிகள், மகளிர் சுய உதவி குழு
உறுப்பினர்களுக்கு மின்சார உலர்த்தி ஆகியவற்றை வழங்கினர். தமிழ்நாடு டாக்டர் ஜெ.
ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குநர் முனைவர்
மா.ராஜாகுமார் வரவேற்புரையாற்றி முன்னிலை வகித்தார். வேளாண்மை அறிவியல்
நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.கோபாலக்கண்ணன் ஆற்றி
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை, முட்டுக்காடு, மீன் வளர்ப்பில் தொழில்முனைவோர் பயிற்சி
மையத்தின் இயக்குனர் முனைவர். பு. சிதம்பரம், கீழ்வேளூர், வேளாண் கல்லூரி சிறப்பு
அலுவலர் முனைவர் ஜி. ரவி, காரைக்கால், பண்டித ஜவகர்லால் நேரு வேளாண்மை
கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை துறை பேராசிரியர் வி. சுந்தரம்,
புதுக்கோட்டை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மண்டல
ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் லூர்து
ரீத்தா, நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு.ஜ.அக்கண்டராவ்,
நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர்
வித்ஜெயகவ்மார், நாகப்பட்டினம் மீன் வளத்துறை மண்டல இணை இயக்குநர் திரு.
இளம்வழுதி, நாகப்பட்டினம் வேளாண்மை பொறியியல் துறை உதவி
செயற்பொறியாளர், நாகப்பட்டினம் நபார்டு வளர்ச்சி மேலாளர், நாகப்பட்டினம் மாவட்ட
தொழில் மைய பொதுமேலாளர், திருவாரூர், பட்டு வளர்ச்சி துறை, உதவி ஆய்வாளர்
காரைக்கால், அகில இந்திய வானொலி நிலைய பண்ணை வானொலி அலுவலர், மேலும்
விவசாய அறிவியல் ஆலோசனை குழு கூட்ட உறுப்பினர்கள் திரு. சண்முக சுந்தரம்,
திரு.வேதையன், திருமதி.இலட்சியம்மாள், திருமதி.கலா, திருமதி.விஜயலெட்சுமி
ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். வேளாண்மை அறிவியல்
நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், திட்ட உதவியாளர் தொழில்நுட்பம் திட்ட
உதவியாளர் கணினி மற்றும் பண்ணை மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு
இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
ஒப்பம்./xxx
திட்ட ஒருங்கிணைப்பாளர்