இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
வேளாண்மை அறிவியல் நிலையம்
சிக்கல்-611 108, நாகப்பட்டினம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா

நாகப்பட்டினம், சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 16.07.2022 அன்று “இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் 94-வது நிறுவன நாள் மற்றும் விவசாயிகளின் வெற்றிகதைகளின் நூல் வெளியிட்டு விழா ” நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர்  அவர்கள் நாடு முழுவதும் இருந்து 75000 விவசாயிகளின் வெற்றிக்கதைகளின் தொகுப்பிணை வெளியிட்டு காணொலிகாட்சி வாயிலாக விவசாயிகளிடையே கலந்துரையாடினார். இதில் நாகை மாவட்டத்தைச் சார்ந்த 100 விவசாயிகளின் வெற்றிக்கதைகளும் அடங்கியுள்ளது   இக்காணொலிக்காட்சியினை நாகை மாவட்டத்தைச் சார்ந்த வெற்றிபெற்ற விவசாயிகள் மற்றும் ஏனைய முன்னோடி விவசாயிகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு விளக்கப்பட்டது. இவ்விழாவில் நெல், நிலக்கடலை, பயறுவகைப்  பயிர்கள், தென்னை, மா, காய்கறிப்பயிர்கள், மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்ப்பு, முட்டை உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இறால் மீன் வளர்ப்பு, கூட்டு கெண்டை மீன் வளர்ப்பு, மீன் குஞ்சு உற்பத்தி, மதிப்புக்கூட்டிய உணவு பொருட்கள் தயாரித்தல், மீன் ஊறுகாய் தயாரித்தல், இறால் ஊறுகாய் தயாரித்தல், சுகாதாரமான முறையில் கருவாடு தயாரித்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் இருமடங்கு வருமானம் பெறக்கூடிய தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் திரு.யு.ஹினோ பர்னாண்டோ, முனைவர்.கோ.சந்திரசேகர், முனைவர்.ஆ.மதிவாணன், திரு.க.ரகு மற்றும் பண்ணை மேலாளர் திரு.ரெ.வேதரெத்தினம், தொழிநுட்ப அலுவலர் திரு.வீ.ஞானபாரதி, கணினி அலுவலர் திருமதி.கோ.ரம்யா ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் 143 விவசாயிகள் கலந்துகொண்டனர்.  மேலும் கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.   

நாள்:16.07.2022
திட்ட ஒருங்கிணைப்பாளர்