மாண்பு மிகு பாரதப் பாரதமர் அவர்களின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்குதல் தொடக்க விழா

மாண்புமிகு பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்குதல் துவக்க விழா

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு ‘மாண்புமிகு பாரதப்பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்குதல் துவக்க விழா” காணொளி காட்சி மற்றும் கருத்தரங்கம் 31.05.2022 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவினை தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவர் சு.முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து தொடக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியினை “காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு” செய்யப்பட்டது. அதில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கிசான் சம்மான் நிதியின் 11 வது தவனை பரிமாற்றம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து விவசாயிகளுடன் காணொளி மூலம் செய்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் மத்திய அரசின் பிரதான திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து குருவை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து நிலைய தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் வே.கண்ணன் விவசாயிகளிடையே கலந்துரையாடினர். இவ்விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமிய இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மர கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் கோ.சந்திரசேகர், முனைவர் அ.மதிவாணன், ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் திரு. ஹினோ பெர்னாண்டோ தொகுத்து வழங்கினார். தொழில்நுட்ப வல்லுநர் திரு.க.ரகு நன்றி உரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் திரு.ரெ.வேதரெத்தினம், திட்ட உதவி கணினி திருமதி.கோ.ரம்யா, உதவியாளர் திருமதி பொ. சூரியகலா மற்றும் திரு. சீ.தமிழ் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.